வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா 5ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2022 05:03
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மார்ச் 5 பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்குகிறது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 13ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 15 முதல் 19 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச் 20 இரவு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மார்ச் 21ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்ச் 22ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. கொரோனா தொற்று பிரச்னை இருப்பதால் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என கோயில் தக்கார் சுகன்யா மற்றும் விழாக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.