பதிவு செய்த நாள்
03
மார்
2022
05:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் தங்க விமானத் திருப்பணிக்கு ஆண்டாள் பேரவை சார்பில் 3ம் கட்டமாக 600 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
திருக்கோஷ்டியூர் பூமிநீளா சமேத சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள அஷ்டாங்கவிமானத்திற்கு தங்கத் திருப்பணி நடைபெற்று வருகிறது. 3448 சதுர அடி பரப்பிலான இந்த விமானத்திற்கு தங்கத் தகடு வேய சதுர அடிக்கு 22 கிராம் தங்கம் தேவைப்படுகிறது. இதற்காக சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம், சவுமியநாராயணபெருமாள் சாரிடபிள் டிரஸ்ட், கோவில் கிராமத்தினர் இணைந்து திருப்பணிக்கு உபயதாரர்களிடமிருந்த தங்கம் சேகரித்து வருகின்றனர். திருப்பணிக்காக தமிழ்நாடு ஆண்டாள் பேரவை சார்பில் தொடர்ந்து தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதுரையில் நடந்த விழாவில் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில், மாநில செயலாளர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் சாய்சிவா, பேரவை நிர்வாகிகள் பாண்டியராஜா, திருமலைராஜா, ராஜ்பிரகாஷ் முன்னிலையில் 600 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், பட்டாச்சார்யர்கள் ஸ்ரீராம், பராசுராம், பிரசன்னா, ஸ்ரீவில்லிபுத்தூர் சுதர்சன சுவாமிகள், தலைவர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.