திருப்புவனம்: திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரு வருடங்களுக்கு பிறகு ராட்டினம், ஜெயண்ட் வீல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் களை கட்டியது. திருப்புவனத்தில் வருடம் தோறும் மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும், திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த தினசரி வருகை தருவது உண்டு, அம்மனை தரிசித்த பின் கோயில் எதிரே உள்ள மைதானத்தில் ஜெயண்ட் வீல், டிஷ்கோ ரைடர், ரயில் வண்டி, டோரா டோரா ராட்டினம் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறும், திருப்புவனத்தை பொறுத்த மட்டிலும் குழந்தைகள், பெரியவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் கிடையாது, திருவிழாக்களின் போது இடம் பெறும் இந்த ராட்டினம் மட்டும்தான், கொரானோ பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக இடம் பெறாத ராட்டினம் உள்ளிட்டவைகள் இந்தாண்டு இடம் பெற்றது வரவேற்பை பெற்றுள்ளது.