திருச்செந்துார்: திருச்செந்துார் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது அவதார தினவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு வழிபட்டனர். திருச்செந்துார் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தினவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 ணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல்நடந்தது. காலை 7 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் தமிட்டு, அவதாரபதிக்கு அய்யா வைகுண்டர் அழைத்து வரப்பட்டார். அப்போது பல ஆயிரம் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். பின்னர் அவதார தின விழா பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துார் சார்பு நீதிபதி வஷித்குமார், நான்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பெருளாளர் ராமையா, உள்ளிட்ட திரளான கலந்து கொண்டனர்.