Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் ... மண்டைக்காடு மாசிக்கொடை விழா: நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை மண்டைக்காடு மாசிக்கொடை விழா: நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று வளர்பிறை பஞ்சமி: வாராஹி வழிபாடு செல்வ வளம் சேர்க்கும்
எழுத்தின் அளவு:
இன்று வளர்பிறை பஞ்சமி: வாராஹி வழிபாடு செல்வ வளம் சேர்க்கும்

பதிவு செய்த நாள்

07 மார்
2022
12:03

இன்று 7ம் தேதி, வளர்பிறை பஞ்சமி. பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற் கான மிக முக்கியமான நாள்.  சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களில் வராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும்,  இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள். வராஹி தேவியின் திருநாமங்கள்... 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி.

ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது. பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது. சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு வைத்து அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு.  மாதந்தோறும் வளர்பிறைதான் வராஹி வழிபாட்டுக்கு உகந்த அற்புத நாள். கோலம் போடுவது என்பது அம்பிகையை ஆத்மார்த் தமாக வரவேற்கும் வடிவம்.
லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும். அனவரதமும் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் கோலமிடச் சொல்கிறது சாஸ்திரம். கோலமிட்ட வீட்டில் அம்பிகை மிகுந்த கனிவுடன் சுபிட்சத்தை வழங்க எழுந்தருள்கிறாள் என்பது ஐதீகம்! மேலும் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியிலும் வராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றுங்கள். தேவியின் திருநாமங்களைச் சொல்லி உங்கள் பிரார்த்தனைகளை அவளிடம் சொல்லி முறையிடுங்கள். வளர்பிறை பஞ்சமி நாளில், வராஹியை நினைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். ஒரு பத்துநிமிடமேனும் அவளின் திருநாமங்களைச் சொல்லி, உங்கள் கோரிக்கைகளை யெல்லாம் சொல்லி முறையிடுங்கள். கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி மன்றாடுங்கள். இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவாள். எதிர்ப்புகளை தலைதெறிக்க ஓடச் செய்வாள் வராஹிதேவி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar