பதிவு செய்த நாள்
07
மார்
2022
04:03
கூடலூர்: பொக்காபுரம் மாரியம்மன் கோயில், தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி சோலூர் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 4ம் தேதி நடை திறப்புடன் விழா துவங்கியது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், காலை முதல் சிறப்பு பூஜைகளும், இரவு 8:00 மணிக்கு கங்கை பூஜை நடந்தது. நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 10:00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் கடைசி நாளான இன்று, காலை 8:45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடபெறுகிறது. நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்கள், கர்நாடகா மாநில பக்தர்கள் விழாவில் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர். இதனிடையே, பக்தர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக, சிறப்பு தரிசனத்துக்காக, 20 ரூபாய் வசூல் செய்யும் பணியை நிர்வாகம் ரத்து செய்தது. விழாவை முன்னிட்டு, கூடலூர், ஊட்டியில் இருந்து கோவிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.