பதிவு செய்த நாள்
08
மார்
2022
03:03
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவையில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நாளை (9ம் தேதி) காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இதில், கொடியேற்றத்தில் இருந்து ஒன்பது நாட்களும், காலையில், யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 15ம் தேதி, மாலை, 4:35 மணிக்கு, திருத்தேர் திருவிழா நடைபெறும்.