ராமேஸ்வரம் தீர்த்தத்தில் கலக்கும் கழிவுநீர் : பக்தர்கள் அருவெருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2022 03:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி சென்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசிக்கின்றனர். சில ஆண்டுக்கு முன் கோயிலை சுற்றியுள்ள லாட்ஜ், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அக்னி கடலில் கலந்து துர்நாற்றம் வீசி, தீர்த்தம் மாசுபட்டது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்து, தீர்த்தம் மாசுபடுவதை தடுக்க உத்தரவிட்டது. அதன்படி அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து, கழிவுநீரை 200 மீட்டர் தூரம் கடத்தி கடலில் விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால், கழிவுநீரை மீண்டும் அக்னி கடலில் நேரடியாக கலக்கிறது. இதனால் தீர்த்தம் துர்நாற்றம் வீசி பக்தர்கள் அருவெருப்புடன் நீராடுகின்றனர். இதனால் பக்தர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அவலம் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு கழிவுநீரை புனித தீர்த்தத்தில் கலந்து விடும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.