ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2022 03:03
சோமனூர்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பழமையானது. கடந்த, பிப்., 22 ம்தேதி பூச்சாட்டுதலுடன் திரு விழா பூஜைகள் துவங்கின. மார்ச் 1 ம்தேதி கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடினர். நேற்று விநாயகர், கருப்பராயன் பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. நாளை அதிகாலை, அம்மை அழைத்தல், அம்மனுக்கு திருக் கல்யாணம் நடக்கிறது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.