போர் வேண்டாம்.. குத்துவிளக்கேற்றி மாணவிகள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2022 03:03
நாகப்பட்டினம்: ரஷ்யா-உக்ரைன் நாடுகள் போரை நிறுத்த வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என, நாகையில் தனியார் கல்லூரி மாணவிகள் 1008 குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
நாகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, தனியார் கல்லூரி மாணவிகள், ரஷ்யா-உக்ரைன் நாடுகள் போரை நிறுத்த வேண்டும். போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக மக்கள் ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும். உலகத்தில் அமைதி நிலவ வேண்டும். என பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவிகள் 1008 குத்துவிளக்கேற்றி, மங்களப் பொருட்கள் வைத்து, தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.