கமுதி முத்துமாரி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 06:03
கமுதி: கமுதி முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்பலகாரர் சக்திவேல், மாசிமாத டிரஸ்டி சங்கர், டிரஸ்டிகள் தலைமையில் கோயிலிலுள்ள கொடிமரத்துக்கு கொடிபட்டம் ஏற்றப்பட்டது.அதற்கு முன்னதாக மூலவரான அம்மனுக்கு பால்,மஞ்சள் உட்பட 17 வகையான அபிஷேகங்கள்,சிறப்புபூஜை நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்தும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருக்கத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் காலை,மாலை அம்மனுக்கு சிறப்புபூஜை, நகர் ஊர்வலம் நடைபெறும். வருகின்ற மார்ச் 22ம் தேதி பொங்கல் விழா, மார்ச் 23 அக்னிசட்டி, பால்குடம், மார்ச் 25 திருவிளக்கு பூஜை, மார்ச் 26 முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.