திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 12:03
திருவான்மியூர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகராஜ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனிமாதப் பெருவிழா, நேற்று இரவு 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கொயேற்றத்துடன் துவங்கியது. தியாகராஜ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை அதிகாரநந்தி சேவையும், 13ம் தேதி ரிஷபவாகன புறப்பாடும் நடக்கின்றன. விழாவின் முக்கிய நாளான, 15ம் தேதி சந்திரசேகரர் தேர்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச் சியும் நடக்கின்றன .