பதிவு செய்த நாள்
10
மார்
2022
01:03
திருநெல்வேலி: நெல்லைடவுன் அணில் சுடலைமாட சுவாமி கோயிலில் மாசி கொடைவிழா நடந்தது.
நெல்லைடவுன் கூலக்கடைதெரு அணில் சுடலைமாட சுவாமி கோயிலில், சுவாமி, சிவனணைந்தபெருமாள், பேச்சியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுடன் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு கொடைவிழா கடந்த மார்ச் 1ம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. கடந்த7ம் தேதி மாலை5 மணிக்கு கருப்பன்துறை அணில் சுடலைமாட சுவாமி கோயில் முன்பிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு மேல் குடியழைப்பு பூஜைநடந்தது. கொடைவிழாவான 8ம் தேதியன்று அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெரு மாள் பூஜை, காலை8 மணிக்கு பால்குடம், நேமித்த பொருட்கள் வீதியுலா, மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், அலங்காரம், மதியக்கொடை, மாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. கும்பபூஜையை தென்மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்க பொருளாளர் காசி விஸ்வநாதபட்டர்செய்தார். வரும் 15ம் தேதி எட்டாம் பூஜை வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லைடவுன் அணில் சுடலைமாட சுவாமி கோயில் பூஜை கைங்கர்யம் வெங்கடேஷ் மற்றும் கொடை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.