திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 01:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு இன்று காலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் இன்று (10ம் தேதி) காலை 10 மணியளவில் கோயில் முன்புறம் உள்ள பெரிய கொடிமரத்தில் பட்டாச்சாரியார்களால் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணமும் நடந்தது. சர்வ அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூர்த்திகளுக்கு முன்பாக அலங்கார தீபாராதனையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. கொடி மரத்தைச் சுற்றிலும் தர்ப்பை புற்கள் கட்டப்பட்டது. வருகிற மார்ச் 18 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மேல் பெரிய தேரோட்டம் நடக்கவுள்ளது. தொடர்ந்து 12 நாட்களும் காலை மாலை நேரங்களில் விசேஷ திருமஞ்சனம், வீதியுலா புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன், பேஸ்கார் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.