ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 05:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று(10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். முக்கிய திருநாட்களான உறையூர்கமலவல்லி நாச்சியார்-ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்தி சேவை 15ம் தேதியும், ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாயகி தாயார் - ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்தி செய்தி 18ம் தேதியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (கோரதம் ) 19ம் தேதி அன்றும் நடைபெறுகிறது.