பதிவு செய்த நாள்
11
மார்
2022
12:03
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் பட்டத்தரசி அம்மன் கோவில் திருத்தேர் விழா நடந்தது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுஸிங் யூனிட் அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன், செல்வ விநாயகர், கன்னிமார், ஓம் சக்தி திருக்கோவில்கள் உள்ளன. இவற்றின், 13ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தண்டு மாரியம்மன், பண்ணாரி அம்மன், காளியம்மன், மாகாளியம்மன், கன்னிமார், மதுரை வீரன், முனி பூஜைகள் ஆகியன நடந்தன. தொடர்ந்து, ஆபரண திருவிளக்கு ஊர்வலம், சக்தி கரகம் அழைத்தல், திருக்கல்யாண நிச்சயதாம்பூலம், கரகம் அழைத்தல், மகா அன்னதானம், மாவிளக்கு, அம்மன் திருத்தேர் ஊர்வலம் ஆகியன நடந்தன. நேற்று காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இன்று பகல், 12:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.