திருக்கோவிலூர் குளம் சீரமைப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 03:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தெப்பக்குளம் மற்றும் தீர்த்த குளங்களுக்கான நீர் வழிப்பாதை மற்றும் குளத்தை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருக்கோவிலூர் தெப்பக்குளம் மற்றும் தீர்த்த குளங்களுக்கு ஏரியிலிருந்து மதகு வழியாக பழமையான பாதாள கால்வாய் மூலம் தண்ணீர் வந்து நிரம்பும். கடந்த 10 ஆண்டுகளாக பாதாள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் குளங்களுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் தெப்பக்குளம் முள் முளைத்து பாழடைந்தது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று பாதாள கால்வாயை சீரமைப்பது மற்றும் குளங்களை சரி செய்வது குறித்து ஆய்வு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் மணிவண்ணன், செயற்பொறியாளர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சிதம்பரம், விழுப்புரம் செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வசந்த், உதவி பொறியாளர் சம்பத்குமார் ஆகியோர் வந்திருந்தனர். திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன், துணைத் தலைவர் குணா, நகராட்சி ஆணையர் கீதா மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஏரியிலிருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாய் வழித்தடங்களையும், அடைப்பு ஏற்பட்டு இருக்கும் இடங்கள் மற்றும் அவற்றை சீரமைப் பதற்கான வழிவகைகள் குறித்து எடுத்துக்கூறினர். உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாக ஏஜென்ட் கோலாகலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.