சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி கீழக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகத்துடன், வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விசேஷ ஆராதனைகளுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. பூத்த மலர் அலங்காரத்துடன் பூச்சொரிதல் விழா நடந்தது ஏராளமான பக்தர்கள் மலர் காணிக்கை செலுத்தி, வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.