முதுகுளத்தூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 07:03
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.அதற்கு முன்பாக மூலவரான முருகன்,வள்ளி, தெய்வானை பால், பன்னீர்,சந்தனம்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.பின்பு முருகன் கோயிலில் காப்பு கட்டப்பட்டது.நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்புகட்டினர்.வருகின்ற மார்ச் 18 தேதி பால்குடம்,காவடி,வேல்குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை சரவணன் பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு செய்தனர்.