பதிவு செய்த நாள்
12
மார்
2022
08:03
ஆனைமலை: கோட்டூர், பழனியூர் ரோட்டில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி தேர்கலசம் ஏற்றுதல், 9ம் தேதி அம்மன் அபிஷேகம், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது.நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மாலை, 4:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடந்தது.நேற்று காலை, 8:00 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் பூமிதித்தல் விழா நடந்தது. விரதமிருந்த, 160க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பூ அள்ளிக்கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று, காலை, 8:00 மணிக்கு தேர் திருவீதியுலா நடக்கிறது.