பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்குமுன் சிவனை வழிபட்டு யாகம் செய்ய எண்ணினார். குறப்பிட்ட நேரத்தில் சரஸ்வதி அங்கு வராமல் போக, சாவித்ரியுடன் யாகத்தைச் செய்து முடித்தார். அந்த இடம் ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீருக்கு அருகிலுள்ள புஷ்கர் என்னும் தலமாகும். அங்குள்ள தீர்த்தபாஜ் என்னும் தடாகமே பிரம்மன் யாகம் செய்த இடம். அருகே பிரம்மனுக்கு ஒரு கோயில் உண்டு. இரண்டு தனித்தனி மலைகளில் காயத்ரியும் சாவித்ரியும் கோயில் கொண்டுள்ளார். இங்கு பிரம்மா யாகம் செய்த தினமும் கார்த்திகைப் பவுர்ணமிதான். அன்றைய தினம் கும்பகோணம் மகாமகம்போன்று பக்தர்கள் குளத்தில் நீராடுவர்.