சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்ஸவ விழா மார்ச் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்0றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பால் குடம் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாரியம்மன் கோயிலில் உள்ள வரசித்தி விநாயகர் சன்னதியில் இருந்து 51 பால்குடங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இன்று தலைக்கட்டு பொங்கல், சர்வமங்கள அலங்காரம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.