மானாமதுரை: மானாமதுரை அருகே செய்களத்தூரில் உள்ள கடம்பவன காமாட்சி அம்மன் கோயில் மகா உற்ஸவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெருங்களத்தூரில் உள்ள கடம்பவன காமாட்சியம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதம் மகா உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான மகா உற்சவ விழா சில நாட்களுக்கு முன்பு கொயேற்றத்துடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமியாட்டம் நிகழ்ச்சிக்காக நேற்று மாலை சாமியாடிகள் அருகில் உள்ள வைகை ஆற்றில் இருந்து சாமி வேடம் பூண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர். நாளை ( ஞாயிறு) மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் நாகுபாண்டியன், நாகராஜன், அன்புகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்னர்.விழாவில் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது.