பட்டமங்கலம் பங்குனித் திருவிழா: மார்ச் 18 ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2022 07:03
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே அடைக்கலம் காத்த பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர் அழகு சவுந்தரி அம்பாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 18 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனித் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பிப்.28 ல் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் பூதம் எடுப்பும், பிடி மண் கொடுத்தலும் நடந்தது. மார்ச் 4ல் சைவ முனீஸ்வரர் பூஜை, மார்ச் 7 ல் பூதமெடுப்பும், மார்ச் 9 ல் பூச்சொரிதல் விழாவும் நடந்தது. பின்னர் மார்ச் 10ல் மதியாத கண்ட விநாயகர், சவுந்தரி அம்பாளுக்கு காப்புக்கட்டி 11 நாட்கள் நடைபெறும் பங்குனி விழா துவங்கியது. தினசரி காலை திருவீதி புற்பாடும், இரவு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. மார்ச் 18 ல், தேரோட்டம், மார்ச் 19ல் தீர்த்தம் கொடுத்தல், மஞ்சுவிரட்டு, மார்ச் 20ல் காப்புகளைதல், ஊஞ்சல் திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது.