சுமங்கலி பாக்கியம் தரும் காரடையான் நோன்பு : கயிறு கட்ட நல்ல நேரம்..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2022 07:03
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் (நாளை இரவு திங்கட்கிழமையன்று) பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் சாவித்திரி தேவியை வழிபடுவதால் இதனை சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். எமனின் பிடியில் இருந்து கணவரை மீட்டவள் சாவித்திரி. கணவரின் மீது கொண்ட பக்தியால் இவளை சத்தியவான் சாவித்திரி எனக் குறிப்பிடுவர். இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு தீர்க்காயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருந்து பூக்கள் சுற்றிய மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிவர். கணவர் (அ) வயது முதிர்ந்த சுமங்கலிகள் மூலம் சரடு அணிவது சிறப்பு. கன்னி பெண்கள் சரடு கட்ட நல்ல மணவாழ்க்கை அமையும். விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். உருகாத வெண்ணெய்யை அடையோடு படைத்து வழிபடுவர். குடும்பத்திலுள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு உணவளிப்பது நல்லது.. அதன் பின்னரே நோன்பு முழுமை பெறும். விரதமிருக்கும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி (அ) சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின் மஞ்சள் சரடு கட்டலாம். சுமங்கலி பாக்கியம் நிலைக்க சாவித்திரி தேவியைப் பிரார்த்திப்போம்.