பதிவு செய்த நாள்
14
மார்
2022
08:03
மகம்: வாக்குவாதத்தை தவிர்க்கும் உங்களுக்கு இந்த மாதத்தில் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப் பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க லாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடை யில் அன்பு அதிகரிக்கும். சுபச்செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு சில முக்கியமான காரியங் ளை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மார் 31, ஏப் 01
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 22, 23
பூரம்: அறிவுத்திறமையால் காரிய வெற்றி கொள்ளும் உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். பெற்றோர் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 01, 02
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 23, 24
உத்திரம் - 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை கொண்ட உங்களுக்கு இந்த மாதத்தில் எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். குரு பார்வையால் சுபச்செலவு ஏற்படலாம். பயணங்களின் மூலம் வெற்றி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வ தும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினர் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு எதிலும் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 02, 03
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 24, 25