பதிவு செய்த நாள்
14
மார்
2022
08:03
உத்திரம் - 2, 3, 4: எத்தனை குறுக்கீடு வந்தாலும் வெற்றி கொள்ளும் உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப்பளு ஆகியவை இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்துறையினர் அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சிவன், அம்பாளை வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 02, 03
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 24, 25
ஹஸ்தம்: மன அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த மாதத்தில் துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். ஐந்தாமிட சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குருவின் இருப்பால் உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவ ரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
பரிகாரம்: மாரியம்மனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைக ளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 03, 04
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 25, 26
சித்திரை - 1, 2: எதிலும் சீக்கிரமே தீர்வு காணும் உங்களுக்கு இந்த மாதத்தில் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டா கும். ராசிக்கு ஐந்தாம் இடத்தில் புதன், சுக்கிரன், சனி சஞ்சாரம் செய்வதால் வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியவை அகலும். செலவு கட்டுக்குள் இருக்கும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோ சனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும். பெண்களுக்குகடன் பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு புதிய எண்ணங்கள் உண்டாகும். அரசியல்துறையினருக்கு புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங் களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 04, 05
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 26, 27