பதிவு செய்த நாள்
14
மார்
2022
08:03
பூரட்டாதி - 4: எதையும் சமாளித்து முன்னுக்கு வரும் திறன் உடைய உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு மங்களகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.
பரிகாரம்: ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: மார் 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப் 06, 07
உத்திரட்டாதி: எதையும் தைரியமாக செயல்படுத்தும் உங்களுக்கு இந்த மாதத்தில் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். 11ல் சஞ்சாரம் செய்யும் கிரக கூட்டணி மூலம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் சிறப்பாக இருக்கும். அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மார் 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப் 07, 08
ரேவதி: அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் உங்களுக்கு இந்த மாதத்தில் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும் பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு தேங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பரிகாரம்: நவக்ரஹ குருவை வணங்குவது வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மார் 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப் 08, 09