அஸ்வினி: அன்புடன் அனைவருடனும் பழகும் உங்களுக்கு இந்த மாதம் நக்ஷத்ராதிபதி கேது சஞ்சாரம் நன்மையை தரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வேகம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு ராசியிலேயே சூர்யன் இருப்பதால் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 19 அதிர்ஷ்ட தினங்கள்: மே 06
பரணி: அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவரான உங்களுக்கு இந்த மாதம் நக்ஷத்ராதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் சுணங்கி கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு மிக அழகாக செய்து முடிப்பீர்கள். பகைவர்களால் இருந்த தொல்லைகள் அகலும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஏற்றங்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 20 அதிர்ஷ்ட தினங்கள்: மே 07
க்ருத்திகை - 1: எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் நக்ஷத்ராதிபதி சூர்யன் ராசியிலேயே உச்சமாக இருப்பதால் அனைத்தும் நன்மையாக இருக்கும். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றும். வாக்கு வன்மை காணப்படும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய உற்சாகம் இருக்கும். வீண் அலைச்சல் அகலும். வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினர் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். பரிகாரம்: உப்பிலியப்பன், பூமி தேவியை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும். சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 21, 22 அதிர்ஷ்ட தினங்கள்: மே 08
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »