மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவில் வரும் 18ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று 6ம் நாள் விழாவை முன்னிட்டுகாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்குவெள்ளி வாகனத்தில் உற்சவர் மலை வலம் வந்தார்.இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி யானை வாகனத்தில் மலை வலம் நடந்தது. வரும் 17ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் அதனைத் தொடர்ந்து 18ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது.