பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் மூலவர் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார்.
இக்கோயிலில் பங்குனி விழாவையொட்டி மூலவர் சந்தனகாப்பு, வெள்ளி, தங்க கவசம், முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதித்தார். மார்ச் 19 ல் இரவு மின் தீப தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 21 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ள பால்குட வைபவம் நடக்கிறது. அன்று மூலவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடக்க உள்ளது.