திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி மகோற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2022 08:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர மகோற்ஸவம் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி உத்திர மகோற்ஸவம் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பெருமாள் தாயார் சன்னதியில் எழுந்தருளினார்.பின்னர் தாயாருக்கும், பெருமாளுக்கும் காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து முத்துகொண்டை வைத்த வெற்றி வேல் மாலை சாற்றிய அலங்காரத்தில் சுவாமியும், தாயாரும் அருள்பாலித்தனர். பின்னர் வைகானச ஆகம முறைகள் பின்பற்றியும், தென்னிந்திய தென்னாச்சார்ய சம்பிரதாயப்படியும் மகோற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து விசசே சாத்துமுறை, விநியோகம் கோஷ்டி நடந்தது.