வேலுார்: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், முத்தரையர் சமூதாயத்தினர் சார்பில், 89 ம் ஆண்டு, 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 8 ம் தேதி தொடங்கியது. இதையொட்டி 8 ம் நாள் தேர்த்திருவிழா நடந்தது. கோவில் தக்கார் விஜயா தலைமை வகித்தார். தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். விழாவில், செயல் அலுவலர் சாமிதுரை, கோவில் அறங்காவலர் சசிகுமார், ஆய்வாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, தேர் உற்சவ கமிட்டி நிர்வாகிகள் வெங்கடேசன் மற்றும் வேலுார், திருவண்ணாமலை மாவட்ட முத்தரையர் சமூதாயத்தினர் பங்கேற்றனர். வரும் 18 ம் தேதி மாலை 4:00 மணிக்கு மார்க்கபந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், இரவு 9:00 மணிக்கு இராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடக்கிறது.