Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ... பழநியில் நேற்று திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம் பழநியில் நேற்று திருக்கல்யாணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர நாளான இன்று இதை படித்தால் முருகனருளால் வாழ்வு வளம் பெறும்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர நாளான இன்று இதை படித்தால் முருகனருளால் வாழ்வு வளம் பெறும்

பதிவு செய்த நாள்

18 மார்
2022
09:03

* முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழை பேசட்டும். என் மனம் உன்னை மட்டும் சிந்திக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருள வேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த மாவீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞான பண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
* எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்க பன்னிரண்டு கைககளுடன் வந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடியிருக்கும் குமரனே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் வாழ்வளித்த புண்ணியமூர்த்தியே! எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரக தோஷம் எதுவும் தாக்காமல் காத்தருள்வாயாக.
* மலைக்குத் தெய்வமான குறிஞ்சி நாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்க.
* கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குரு நாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.
* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட விரைபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும் வழித்துணையாக வருவாயாக.
* சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவோருக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரை சேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் நலமுடன் வாழ வரம் தர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் முதல் கனும சாலையில் உள்ள அக்ககர்லா கோவிலில் நேற்று காலை சப்த ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar