அழகை விரும்பாதவர்கள் யார்? பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழாக இருக்கிறது. அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இப்படி அழகே ஒன்று திரண்ட அழகுள்ளவனே மன்மதன். இவனுக்கு மாரன் என்ற பெயருண்டு. இந்த மன்மதனை போன்று ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் அழகு முன்பு மன்மதனின் அழகு ஏளனப்பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியான என்ற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாரன் (மன்மதன்) கருணை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.