திருவதிகை: திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று(18 ம் தேதி) காலை 9.30 மணியளவில் பெரிய பெருமாள், உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் மற்றும் தாயாருக்கு சேர்த்தி திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணியளவில் உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் தாயாருடன் விசேஷ அலங்காரத்தில் சேர்த்தி சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.