திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் வரசக்தி விநாயகர் கோவிலில் முருகன் வள்ளி தெய்வானை திருமண வைபவ நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரில் முருகனுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு இரவு வரசக்தி விநாயகர் கோவில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை திருமண வைபோகம் நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. இந்த திருமண வைபோக நிகழ்ச்சியை சிவகுமார் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இந்த விழாவில் நவல்பட்டு அண்ணா நகரைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.