பதிவு செய்த நாள்
19
மார்
2022
05:03
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு, 16 வகையான மங்கல திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, பால் குடம் கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி, ரத்ன அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, 9:00 மணிக்கு, உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலையில், தங்க தேர் புறப்பாடு நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி, மருதமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.