பதிவு செய்த நாள்
19
மார்
2022
05:03
சூலூர்: பங்குனி உத்தரத்தை ஒட்டி, சூலூர் வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூலூர் வட்டாரத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில், சூலூர் பழனியாண்டவர் கோவில், குமரன் கோட்டம் அறுபடை முருகன் கோவில் மற்றும் செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்களில் பங்குனி உத்திரத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். சூலூர் பழனியாண்டவர் கோவிலில், காலையில் முருகருக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.