வெற்றிவேல் முருகா கோஷத்துடன் முத்துக்குமார சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 05:03
பல்லடம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வெற்றிவேல் முருகா எனும் கோஷம் முழங்க, மாதப்பூர் முத்துக்குமார சுவாமியின் திருவீதி உலா நடந்தது. பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, மூலவர் முத்துக்குமாரசாமி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் கந்தசாமி, மற்றும் கோவில் தக்கார் பெரிய மருது பாண்டியன் ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். மாலை, 6.00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி, சிறப்பு அலங்காரத்துடன் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி உலா நடந்தது. வா வா முருகா வெற்றிவேல் முருகா எனும் கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விநாயகரை சுற்றி, கிரிவலப் பாதை வழியாக திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.