பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடங்கள், இளநீர், புஷ்ப காவடிகள் எடுத்து வந்தனர். இரண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். இங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.