சென்னை: சென்னை, வடபழநி, திருநகரில் அமைந்துள்ளது சுந்தர விநாயகர் கோயில். இக்கோயிலில் வரும் 21ம் தேதி, பங்குனி 7ம் நாள் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தர விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று (20ம் தேதி) மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் காலயாக பூஜை தொடங்குகிறது. நாளை (21ம்தேதி) 2ம் காலயாக பூஜை, கடம் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து சுந்தர விநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.