திருக்கடையூர் கோயிலில் தருமையாதீனம் சொக்கநாதர் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2022 12:03
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோயிலில் தருமையாதீனம் சொக்கநாதர் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமானுடன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக குருலிங்க சங்கம பாதயாத்திரையாக நேற்று இரவு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சொக்கநாதப் பெருமானை எழுந்தருளச்செய்தார். காலை நூற்றுகால் மண்டபத்தில் குருமகாசன்னிதானம் கோ பூஜை கஜ பூஜை செய்து சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.