திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2022 12:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று (மார்ச் 20) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (மார்ச் 21) நடக்கிறது. சூரசம்ஹார லீலை: நேற்று மாலை வீதிஉலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உள்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன் செல்ல குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும், சிவாச்சார்யார் வாள் ஏந்திச் சென்றார். தொடர்ந்து சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வேலுடன் எட்டு திக்குமகளிலும் விரட்டி சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹார புராண கதையை சிவாச்சாரியார் பக்தர்களுக்கு கூறினார். தீபாராதனை முடிந்து சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.