Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மாரியம்மன் கோயிலில் ... ராமேஸ்வரம் கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை ராமேஸ்வரம் கோயிலுக்கு பேட்டரி கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகு, கேது பெயர்ச்சி : யார் பரிகாரம் செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
ராகு, கேது பெயர்ச்சி : யார் பரிகாரம் செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

20 மார்
2022
12:03

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் ராகு மேஷத்திற்கும், விருச்சிக ராசியில் இருக்கும் கேது துலாமிற்கும் 2022 மார்ச் 21ல் மதியம் 3:13 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2023 அக்.8 வரை இங்கு தங்கியிருப்பர். பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு, கேது பெயர்ச்சி ஏற்படுவதற்குள் குருபகவான் இருமுறையும், சனிபகவான் ஒருமுறையும் பெயர்ச்சியடைகின்றனர். இதில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் ஜாதகத்தில் நல்ல தசா, புத்தி நடப்பில் இருந்தால் பாதிப்பு குறையும்.

உங்களுக்கான பலன் அறிய கிளிக் செய்யவும் https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=475

ராகு
அதிதேவதை : துர்கை, காளி
பிரத்யதி தேவதை: நாகம்
நிறம்: கருமை
வாகனம்: சிம்மம்
தானியம்: உளுந்து
மலர்: மந்தாரை
ரத்தினம்: கோமேதகம்
வஸ்திரம்: நீலம்
நைவேத்யம்: உளுந்துப்பொடி சாதம்
நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு: கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 11/2 ஆண்டு

கேது
அதிதேவதை: விநாயகர், சித்ரகுப்தர்
பிரத்யதி தேவதை: பிரம்மா
நிறம்: பல வண்ணம்
வாகனம்: கழுகு
தானியம்: கொள்ளு
மலர்: செவ்வல்லி
ரத்தினம்: வைடூர்யம்
வஸ்திரம்: பல வண்ண ஆடை
நைவேத்யம்: கொள்ளுப்பொடி சாதம்
நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு: கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 11/2 ஆண்டு

ராகு – பாடல்
பனியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்

கேது – பாடல்
சித்திர வண்ணமே திருந்து மேனியும்
அத்துவசம் பொருமணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.

ராகு – ஸ்லோகம்
அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திராத்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்
பாதி உடலைக் கொண்டவரே! சந்திர, சூரியர்களை கிரகண வேளையில் பிடிப்பவரே! அசுரப் பெண்ணான சிம்ஹிகையின் வயிற்றில் வந்தவரே! ராகுபகவானே! உம்மை வணங்குகிறேன்.

கேது – ஸ்லோகம்
பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
புரச மரத்தின் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையாக விளங்குபவரே! கோபமே வடிவானவரே! பயங்கரமானவரே! உம்மைச் சரணடைகிறேன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; நாவா முகுந்தர் கோவிலில் மாசி மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடந்து வந்த மகா கும்பமேளா நிறைவடைந்தது; மொத்தம், 44 நாட்களில் சுமார் 65 கோடி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar