பாலமேடு: பாலமேட்டில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா மார்ச் 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்னிச் சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை சக்தி கரகம் ஜோடித்து முளைப்பாரி துரக்கி பெண்கள் ஊர்வலமாக சென்று நீரில் கரைத்து, மஞ்சள் நீராடினர். ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.