தேவகோட்டை: தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா கடந்த வாரம் கணபதி ஹோமம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் மாலை அம்மன் கரகம் எடுத்து வீதி உலா வந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். எட்டாம் நாளான நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவைகாவடி, வேல் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.