பதிவு செய்த நாள்
24
மார்
2022
11:03
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில், பங்குனி பிரம் மோற்ஸவ திருவிழாவில், நேற்று தேவ மகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார்.பிரம் மோற்ஸவ திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு 5 நம்பி சுவாமிகளும் மே ல ரத வீதியில், மகேந்திரகிரி மலையை நோக்கி தேவ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா , கோவிந்தா என கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 5 நம்பிகளும் நேற்று காலையில் கோவில் முன் வரிசையாக அணிவகுத்து நின்றனர். ராமானுஜ ஜீயர் 5 நம்பிகளையும் வணங்கி கோயிலுக்குள் அழைத்துச்சென்றார். திருவிழாவின் 10ம் நாள் 27ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். 28ம் தேதி காலை 11 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன், மணியம், ஜீயர் மடம் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.