திண்டுக்கல் : நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22ம் தேதி கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று (23ம் தேதி) காலைமஞ்சள் நீராட்டு விழா, மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.