இடைக்காட்டூரில் ஏப்.22 ஆம் தேதி புகழ்பெற்ற பாஸ்கு திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2022 12:03
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் உலக புகழ்பெற்ற பாஸ்கு திருவிழா ஏப்.22ம் தேதி துவங்க உள்ளது.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உலகப்புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இங்கு வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பு, வரலாறு மற்றும் இயேசு உயிர்ப்பித்தல் போன்றவற்றை பிரம்மாண்ட மேடைகள் அமைத்தும் கண்ணைக்கவரும் ஆடை அலங்காரங்கள் செய்தும் மேடை கலைஞர்கள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக பாஸ்கு திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு வருகிற ஏப்.22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது .இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை இம்மானுவேல் தாசன்,இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம்,செல்ஸ் இளைஞர் பேரவை,மரியின் ஊழியர் சபை கன்னியர் ஆகியோர் செய்து வருகின்றனர்.